100 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் கைது

Colombo (News 1st) மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட இருவர் 100 இலட்சம் ரூபா இலஞ்சம் பெறும் சந்தர்ப்பத்தில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்ணெண்ணெய் சுத்திகரிப்புத் திட்டம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபை வழங்கும் வருடாந்த சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை வெளியிடுவதற்காக அதிகார சபையின் தலைவர் இலஞ்சம் கோரியுள்ளார்.

இரண்டு இடைத்தரகர்கள் மூலம் பணத்தை பெற்றுக்கொண்ட சந்தர்ப்பத்திலேயே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட இருவர் இன்று கைது செய்யப்பட்டதாக இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்தது.

சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles