எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்

Colombo (News 1st) வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ள உத்தேச மின்சார சட்டமூலம் எதிர்வரும் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். 

குறித்த சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அதனை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

உத்தேச மின்சார சட்டமூலத்தில் 42 அச்சுப்பிழைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த தவறுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார். 

இதனிடையே, எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

நீர் மின்னுற்பத்தி அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles