பேராதனையில் 4 பிள்ளைகளின் தந்தை தாக்கி கொலை : இருவர் கைது

Colombo (News 1st) பேராதனை – முறுதலாவ – குறுகம தோட்டத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 பிள்ளைகளின் தந்தையான 55 வயதான ஒருவர் குறுகம தோட்டத்தில் நேற்று முன்தினம்(19) தாக்கி கொலை செய்யப்பட்டார்.

கிரிக்கெட் மட்டை மற்றும் தடியினால் தாக்கப்பட்டமையினால் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles