வறட்சியால் களனி கங்கையின் நீர்மட்டம் குறைவு

Colombo (News 1st) நிலவும் வறட்சி காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் குறைவடைந்து வருவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதனால் நீர் விநியோகத்திற்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்ப்பதற்காக களனி ஆற்றின் குறுக்கே தற்காலிக அணை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் அனோஜா களுஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வறட்சி மற்றும் வெப்பத்தினால் நீர் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நீரை விரயமாக்காது சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles