சீனாவில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

China: சீனாவில் அதிவேக வீதியில் சுமார் 100 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகின.

சீனாவின் Suzhou நகர் அருகில், இன்று (23) இடம்பெற்ற இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

காயங்களுக்குள்ளான மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 6 பேருக்கு சிறிதளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

விபத்திற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த சில வாரங்களாக, சீனாவின் பல பகுதிகள் கடும் குளிர், பனிப்புயல், பனிக்கட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், புத்தாண்டு விடுமுறைக்காக வீடுகளுக்கு செல்லும் மில்லியன் கணக்கான மக்கள் போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles