அமரர் இராசநாயகம் ரவீந்திரன் (Uri மாமா)

பிறப்பு21 NOV 1950, இறப்பு24 FEB 2016

வயது 65

பருத்தித்துறை, Sri Lanka (பிறந்த இடம்) சரவணை, Sri Lanka சுவிஸ், Switzerland

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், சரவணையை வசிப்பிடமாகவும், சுவிஸ் Kanton Uri ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசநாயகம் ரவீந்திரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எட்டு ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா!

ஆண்டவன் படைப்பினை ஆழமாய்
பார்த்தாலும் பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின் புன்னகையை
ரசிக்கின்றோம்!

எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அப்பா!

காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு 
வாழ்ந்து
கொண்டிருக்கின்றோம்

அன்புத் தந்தையே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: மனைவி(France ), பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles