Sangathy
World Politics

இந்தோனேஷியாவில் கோர விபத்து : கார்கள் மீது பேருந்து மோதி 11 பேர் பலி..

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியா மேற்கு ஜாவா மாகாணத்தை சேர்ந்த பாண்டுங் பகுதியில் நடந்த ஒரு பட்டமளிப்பு விழாவில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்ததும் பேருந்து ஒன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜகார்தா பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்தில் மொத்தம் 61 பேர் பயணம் செய்தனர்.

மலைகள் நிறைந்த பகுதியில் பேருந்து கீழே இறங்கி கொண்டு இருந்தபோது திடீரென பிரேக் பழுதானதாக கூறப்படுகிறது.

இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 9 பேர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 2 பேர் உயிர் இழந்தனர். பலியானவர்களில் 9 பேர் மாணவர்கள், ஒரு ஆசிரியர், மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Related posts

கொரியா சென்ற 2000 இற்கும் அதிகமான இலங்கையர்கள்..!

tharshi

இறந்தவரின் உடல் நடுவீட்டில் : கால்பந்து போட்டியை இரசித்த விசித்திர குடும்பம்..!

Appsron digit

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக மீண்டும் சிறில் ரமபோசா..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy