Sangathy
India

மதரஸா இமாம் கொலையில் திடுக் திருப்பம் : மாணவர்களே அடித்துக் கொன்ற கொடூரம்..!

ராஜஸ்தானில் உள்ள மதரஸாவில் இமாமாக பணிபுரிந்து வந்தவரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் 6 மாணவர்களே சேர்ந்து அவரை கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிரபலமான மதரஸா ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏராளமான முஸ்லிம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு இமாமாக (தலைமை ஆசிரியர்) பணிபுரிந்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த மெளலானா முகமது மஹிர் (32) என்பவர் கடந்த வாரம் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக தகவலறிந்த போலீஸார் அங்கு வந்து நடத்திய விசாரணையில், 3 முகமூடி அணிந்த நபர்கள், மதரஸாவுக்குள் புகுந்து மெளலானா முகமதை கொன்றதாக அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்தனர். இதனால் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் இமாமை கொன்றிருக்க வேண்டும் என ராஜஸ்தானில் தகவல் பரவி பெரும் பதற்றத்தை உருவாக்கியது.

இதனைத் தொடர்ந்து, போலீஸார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், மாணவர்கள் சொல்வதை போல யாரும் மதரஸாவுக்குள் புகுந்ததற்கான தடயங்கள் எதுவும் போலீஸாருக்கு சிக்கவில்லை. அதன் பின்னர், மீண்டும் மாணவர்கள் ஒவ்வொருவராக அழைத்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசுவது தெரியவந்தது.

பின்னர் அவர்களிடம் போலீஸார் தங்கள் பாணயில் விசாரணை நடத்திய போது, இமாமை அவர்களே சேர்ந்து அடித்துக் கொன்றது தெரியவந்தது. இமாமாக இருந்த மெளலானா முகமது மஹீர், அங்கு பயிலும் சிறுவர், சிறுமிகளிடம் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மாணவ மாணவிகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

ஒருகட்டத்தில், இமாமின் அத்துமீறல் அதிகரிக்கவே, மூத்த மாணவர்கள் சேர்ந்து அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, கடந்த வாரம் இரவு, தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு திரும்பிய இமாமுக்கு, அவர்கள் தூக்க மாத்திரை கலந்த பாலை பருக கொடுத்தனர். அதை குடித்துவிட்டு தூங்கிய இமாமை 6 மாணவர்கள் சேர்ந்து கட்டை மற்றும் இரும்பு ராடால் சரமாரியாக அடித்துள்ளனர். இதனால் கத்த முயன்ற அவரை, கழுத்தில் கயிறை வைத்து இறுக்கி கொன்றுள்ளனர். மாணவர்கள் அளித்த வாக்குமூலத்தின் பேரில் 6 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Related posts

திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் : கமல்ஹாசனை வளைத்த ஸ்டாலின்..!

Lincoln

சினிமாவில் மாற்றுத் திறனாளிகளை தவறாக சித்தரிக்கும் விதம் : உச்சநீதிமன்றம் கண்டனம்..!

Tharshi

எஸ்பிஐ பெயரில் புதிய மோசடி : உஷாரா இருங்க.. பொதுமக்களுக்கு அலெர்ட் கொடுத்த காவல் துறை..!

Tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy