Sangathy

Sangathy

Colombo (News 1st) தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று(31) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் நிகழ்வில் பங்கேற்பதற்காக பிரதமர் அங்கு சென்றுள்ளதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் தினேஷ் குணவர்தன, தாய்லாந்து மன்னர் மற்றும் பிரதமர் உள்ளிட்ட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார். பிரதமருடன் 11 பேர் கொண்ட தூதுக்குழு தாய்லாந்து நோக்கி பயணித்துள்ளது.

May 31, 2023