Sangathy
Sports

குசல் மெண்டிஸின் விசா சர்ச்சைக்கு முடிவு..!

இலங்கை ரி 20 அணியின் உப தலைவர் குசல் மெண்டிஸ், அமெரிக்கா செல்வதற்காக சமர்ப்பித்த வீசா விண்ணப்பம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, இன்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ருத்துத் தெரிவித்தார்.

அப்போது அவர் குசல் மெண்டிஸின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என்றார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் இணைந்து குசல் மெண்டிஸ் செயற்பட்டு வருவதாக அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் “அவரிடம் சில ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களைக் கொடுத்த பிறகு, அடுத்த ஓரிரு நாட்களில் அவருக்கு விசா கிடைக்கும். எனவே, மெண்டிஸுக்கு பயிற்சிப் போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைக்கும்” என நம்புவதாகத் அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

ரி 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி ஜூன் 2 ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.

Related posts

Kiran reaches boys singles final

Lincoln

Musaeus, Royal win Under 17 girls’ and boys’ tennis titles

Lincoln

Tharupathi shines as Richmond oust Joes

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy