Sangathy
Sports

T20 உலகக் கிண்ணம் : ஓமானை வீழ்த்தியது நமீபியா..!

9-வது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய 3-வது போட்டியில் பி பிரிவில் உள்ள நமீபியா- ஓமான் அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஓமான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி போட்டியின் முதல் 2 பந்துகளில் விக்கெட்டுகளை இழந்தது. ரூபன் டிரம்பெல்மேன் வீசிய அந்த ஓவரில் பிரஜாபதி, அகில் இல்யாஸ் ஆகியோர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் 3-வது ஓவரில் டிரம்பெல்மேன் மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவரது பந்தில் நசீன் குஷி (6 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார்.

அடுத்து மக்சூத் 22 ஓட்டங்களுடன் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். ஓமான் 37 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் காலித் கைல்-அயன்கான் ஜோடி சிறிது நேரம் தாக்கு பிடித்து விளையாடியது.

இந்த ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் சரிந்தது. ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ஓட்டக்களுக்கு சகல விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக காலித் கைல் 34 ஓட்டங்களை எடுத்தார்.

நமீபியா தரப்பில் டிரம் பெல்மேன் 4 விக்கெட்டும் டேவிட் வைஸ் 3 விக்கெட் டும் எராஸ்மஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நமீபியாவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. முதல் ஓவரில் மைக்கேல் வான்லிங்கன் ஓட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன்பின் நிகோலாஸ் டேவின்-பிரைலின்க் ஜோடி பொறுமையாக விளையாடியது. டேவின் 24 ஓட்டங்களிலும், அடுத்து வந்த அணித் தலைவர் எராஸ்மஸ் 13 ஓட்டங்களிலும் சுமிட் 8 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. கைவசம் 6 விக்கெட் இருந்தது. மெக்ரான்கான் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் பிரைலின்க் (45 ஓட்டங்கள்) ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை.

3-வது பந்தில் கிரீன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் ஒரு ஓட்டம் பெறப்பட்டது. 5-வது பந்தில் டேவிட் வைஸ் 2 ஓட்டங்கள் எடுத்தார். கடைசி பந்தில் 2 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் அதில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனால் போட்டம் சமநிலையில் முடிந்தது.

நமீபியா 20 ஓவரில் 6 விக்கெட் 109 ஓட்டங்களை எடுத்தது. போட்டி சமநிலையில் முடிந்ததால் வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடை பிடிக்கப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுதாடிய நமீபியா அணியில் டேவிட் வைஸ், எராஸ்மாஸ் களம் இறங்கினர். பிலால் கான் வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி உள்பட 21 ஓட்டங்களை எடுக்கப்பட்டது.

டேவிட் வைஸ் 13 ஓட்டங்களும், எராஸ்மாஸ் 8 ஓட்டங்களும் எடுத்தார். அடுத்து 22 ஓட்டங்கள் இலக்குடன் ஓமான் விளையாடியது. டேவிட் வைஸ் வீசிய அந்த ஓவரில் ஓமன் அணியால் ஒரு விக்கெட் இழந்து 10 ஓட்டங்களை மாத்திரமே எடுக்க முடிந்தது. இதனால் நமீபியா வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது டேவிட் வைசுக்கு வழங்கப்பட்டது.

Related posts

டோனி இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாதது ஏன்..!

tharshi

People are cheering for the Brazilian team

Lincoln

UAE stun Sri Lanka Under 19s at Asia Cup

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy