Sangathy
World Politics

பிரிட்டனில் புழக்கத்திற்கு வந்த மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள்..!

பிரிட்டனில் மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த கரன்சி நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளன.

ராணி எலிசபெத் மறைவுக்குப் பிறகு பிரிட்டன் அரசராக சார்லஸ் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த சிறப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன.

மன்னர் சார்லஸ் உருவம் பொறித்த 10, 20 மற்றும் 50 பவுண்டு கரன்சி நோட்டுக்களை இங்கிலாந்து வங்கி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனில் மூன்றாம் மன்னர் சார்லஸூ பாங்க் ஆப் இங்கிலாந்து பிரதிநிதிகளால் அவரது உருவப்படம் கொண்ட முதல் செட் கரன்சி நோட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.

மூன்றாம் மன்னர் சார்லஸ் உருவப்படம் கொண்ட பிரிட்டன் நோட்டுகள் நேற்று முதல் புழக்கத்திற்கு வந்தன. இருப்பினும் அன்றாட பண பரிவர்த்தனைக்கு அவை சில காலத்திற்கு அரிதாகவே இருக்கும்.

இதுதொடர்பாக பேங்க் இங்கிலாந்து வங்கி கூறுகையில்,

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவம் கொண்ட நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகள் அச்சிடப்படும் அல்லது பண பயன்பாடு குறைந்து வரும் நேரத்தில் தேவை அதிகரிப்பதற்காக மட்டுமே அச்சிடப்படும்.

புதிய நோட்டுகளுடன் இணைந்து இரண்டாம் எலிசபெத் மகாராணி உருவப்படம் அச்சிடப்பட்ட நோட்டுகளும் புழக்கத்தில் இருக்கும். சில காலத்தில் அன்றாட பண பரிவர்த்தனைகளில் பயன்படுத்தப்படுபவற்றில் பெரும்பகுதியாக இருக்கும்.

வரும் வாரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சல் அலுவலகக் கிளைகளில் இருந்தும் அவை கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.

Related posts

களைகட்டிய ஆனந்த் அம்பானி திருமண விழா : ஆத்திரத்தில் இத்தாலி மக்கள்..!

tharshi

Trump did commit obstruction of Justice

Lincoln

ஆஃபீஸ் மேஜையிலேயே “வாழை” வளர்க்கும் சீனர்கள் : Work Stress போகுதாம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy