Sangathy
World Politics

ரஷ்ய ஆற்றில் மூழ்கி இந்திய மருத்துவ மாணவர்கள் நால்வர் பலி..!

ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாணவர்கள் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவில் மருத்துவம் படிக்கச் செல்கின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து 200 கி.மீ தொலைவில் வோல்கோவ் அருகே அமைந்துள்ள யாரோஸ்லாவ்-தி-வைஸ் நோவ்கோரோட் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் கல்வி பயின்று வந்தனர்.

இதில் நான்கு மாணவர்கள் அபாயகரமான நதி என அங்கிருப்பவர்களால் கூறப்படும் வோல்கா நதியில் மூழ்கி உயிரிழந்தனர்.

இந்திய மருத்துவ மாணவர்கள், இடுப்பளவு நீரில் நின்று கொண்டிருந்த போதும் வலுவான சுழலில் சிக்கியுள்ளனர். முதலில் ஒரு மாணவி சுழலில் சிக்கியதாகவும் அவரை காப்பாற்ற நான்கு பேர் முயன்றதாகவும் கூறுகிறார்கள். அதில் இருவர் பெண்கள் என்கிறார்கள்.

உயிர் மிதவையின் உதவியுடன் ஒரு பெண் மட்டும் காப்பாற்றப்பட 4 பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். உயிரிழந்த அனைவரும் 18 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள்.

இந்த சம்பவம் குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும் போது,

“பாலத்தின் அருகே நீந்துவது மிகவும் ஆபத்தானது என்பதை உள்ளூர்வாசிகளான நாங்கள் அனைவரும் அறிவோம். வலுவான நீரோட்டம், பள்ளங்கள், கற்கள் மற்றும் நீர்ச்சுழல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.

இதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். நான் அந்த சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை, ஆனால் அதைப் பார்த்தவர்கள் ஒரு பெண் மூழ்க தொடங்கியதாகவும் மீதமுள்ளவர்கள் அவளை காப்பாற்ற விரைந்ததாகவும், ஆனால் அனைவரும் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டனர் என்று கூறுகின்றனர் ” என்றார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்திய தூதரகம் பல்கலைக்கழகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும், அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜப்பானில் பரவும் அரிய வகை நோய்..!

tharshi

கணவரின் ஆனிவர்சரி கிஃப்ட்டில் லாட்டரி வாங்கிய மனைவிக்கு ரூ. 8.22 கோடி பரிசு..!

tharshi

British Parliament

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy