Sangathy
World Politics

விமானத்தில் சுற்றித்திரிந்த பூனை..!

பறக்கும் விமானத்திற்குள் பூனை ஒன்று சுற்றித்திரிந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருந்து டென்னிசியின் நாஷ்வில்லி பகுதிக்கு இயக்கப்பட்ட ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஜேசன் பிட்ஸ் என்பவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அந்த வீடியோவில் ஒரு பூனை விமானத்திற்குள் சுற்றி திரிகிறது. வீடியோவுடன் அவரது பதிவில், சில நாட்களுக்கு முன்பு ஸ்பிரிட் ஏர்லைன்சில் ஒரு பூனை சுற்றித்திரிவதை கண்டேன். விமான பணிப்பெண்கள் அதனை கவனிக்கவில்லை.

விமானத்தில் இருந்த ஒருவரின் பையில் இருந்து அது வெளியேறியது. பயணிகள் எல்லோரும் அந்த பூனையை வேடிக்கையாகவும், செல்லமாகவும் கவனித்தனர் என பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts

உலகின் அதிக வெப்பமான மாதமாக பெப்ரவரி மாதம் பதிவு..!

Lincoln

Roger Stone yesterday

Lincoln

இறந்த அம்மா உடலில் இருந்து மீட்கப்பட்ட பெண் சிசு : ரஃபா தாக்குதலில் பிறக்கும்போதே குடும்பத்தை இழந்த சோகம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy