Sangathy
Cinema World

சுதா கொங்கரா – STR50 : வெளியான புது அப்டேட்..!

சிம்பு ‘பத்து தல’ திரைப்படத்திற்கு பிறகு தற்பொழுது மணி ரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது.

இதற்கிடையில் சிம்பு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48வது திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டானார். இந்த படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இது ஒரு பீரியாடிக் கதைக்களத்துடன், சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார். தக் லஃப் படப்பிடிப்பை முடித்துவிட்டு STR48 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்நிலையில் சிம்புவின் 50 – வது திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. சுதா கொங்கரா தற்பொழுது பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை எடுத்து முடித்து வரும் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

அதற்கடுத்து கொம்பலே பிலிம்ஸ் நிறுவனத்துடன் படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஏற்கனவே கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்துவிட்டு சிம்புவின் 50- வது திரைப்படத்தை இயக்குவார் என நம்பப்படுகிறது.

Related posts

நடிகை கார் விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து நடிகர் தற்கொலை : அதிர்ச்சியில் தெலுங்கு சின்னத்திரை..!

tharshi

கையில் எலும்பு முறிவு : ஐஸ்வர்யாராய்க்கு அறுவை சிகிச்சை..!

tharshi

ஷூட்டிங் ஸ்பாட்டில் சினேகாவை பிராங்க் செய்த விஜய் : தளபதி இப்படியெல்லாம் செய்வாரா..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy