Sangathy
Sports

அரையிறுதியில் ஆப்கானிஸ்தான்..!

2024 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை 8 ஓட்டங்களால் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 115 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 43 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரிஷாட் ஹொசைன் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதேவேளை, போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் 114 என்ற வெற்றி இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 17.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

இதற்கமைய, 2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளன.

அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Khawaja’s 14th Test ton makes it Australia’s day

Lincoln

Iga Swiatek loses to Elena Rybakina, Coco Gauff out to Jelena Ostapenko

Lincoln

Punjab Kings sign Sam Curran for an IPL record INR 18.50 crores

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy