Sangathy
Sports

யூரோ கால்பந்து : துருக்கி மற்றும் நெதர்லாந்து அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்..!

யூரோ கோப்பை 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் துவக்க சுற்று போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதிக்கு முந்தைய ரவுண்ட் ஆஃப் 16 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

அந்த வகையில், நேற்று நள்ளிரவு நடைபெற்ற போட்டிகளில் ரோமானியா – நெதர்லாந்து அணிகளும், அதன் பிறகு நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகளும் மோதின. இதில் முதலில் நடைபெற்ற ரோமானியா – நெதர்லாந்து அணிகள் இடையிலான போட்டி அமைதியாகவே துவங்கியது.

பிறகு, நீண்ட நேரம் பந்தை வைத்திருந்து நெதர்லாந்து அணியின் கோடி கேக்போ பெனால்டி பகுதி அருகே இருந்து அடித்த ஷாட் கோலாக மாறியது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற வகையில் முன்னணி பெற்றது. இந்த கோல் மூலம் நடப்பு யூரோ கோப்பையில், கோடி கேக்போ தனது மூன்றாவது கோலை நிறைவு செய்தார்.

இதைத் தொடர்ந்து இரு அணிகளும் மற்றொரு கோல் அடிப்பதில் முனைப்பு காட்டின. எனினும், போட்டியின் முதல் பாதி வரை மற்றொரு கோல் அடிக்கப்படவில்லை. இதன் காரணமாக முதல் பாதியில் நெதர்லாந்து 1-0 என்ற வகையில் முன்னணியில் இருந்தது. போட்டியின் இரண்டாவது பாதியில் நெதர்லாந்து வீரர் மலென் கோல் அடிக்க அந்த அணி 2-0 என முன்னணி பெற்றது.

மறுபுறம் பதில் கோல் அடிக்க ரோமானியா அணி வீரர்கள் தீவிரம் காட்டினர். எனினும், அந்த அணி வீரர்கள் கோல் அடிக்க முடியாமல் திணறினர். பிறகு சில நிமிடங்களில் மீண்டும் மலென் கோல் அடிக்க நெதர்லாந்து அணி 3-0 என்று தொடர்ச்சியாக முன்னணியில் இருந்தது. போட்டி முடியும் வரை ரோமானியா அணி கோல் அடிக்கவில்லை. இதன் காரணமாக நெதர்லாந்து அணி 3-0 என்ற வகையில் போட்டியில் வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆஸ்திரியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. இந்த போட்டியில் துவக்கம் முதலே விறுவிறுப்பு பற்றிக் கொண்டது. இந்த போட்டி துவங்கிய 58 நொடியில் துருக்கி வீரர் மெரி டெமிரல் கோல் அடிக்க, அந்த அணி துவக்கத்திலேயே முன்னணி வகித்தது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரியா அணி கோல் அடிக்க முனைப்பு காட்டியது.

எனினும், அந்த அணி வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. போட்டியின் 59-வது நிமிடத்தில் துருக்கி அணி மற்றொரு கோல் அடித்தது. இதைத் தொடர்ந்து போட்டியின் 66-வது நிமிடத்தில் ஆஸ்திரியா கோல் அடித்தது. இதன் காரணமாக ஆஸ்திரியா போட்டியில் தனது முதல் கோலை பதிவு செய்தது.

துருக்கி 2-1 என்ற நிலையில், போட்டி தொடர்ந்த நிலையில், ஆஸ்திரியா வீரர்கள் மற்றொரு கோல் அடிக்க அதிக தீவிரமாக முயற்சித்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த அணி ஒரு கோல் அடிக்கவும் செய்தது, எனினும், துருக்கி அணியின் கோல் கீப்பர் மெர்ட் குனோக் சாமர்த்தியமாக கோலை தடுத்ததால், ஆஸ்திரியாவின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

போட்டி முடிவில் துருக்கி 2-1 அடிப்படையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அத்தியது. அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற இரு போட்டிகளில் விளையாடிய நான்கு அணிகளில் நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகள் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தின.

Related posts

Moose Clothing powers Zahira Rugby

Lincoln

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ஓட்டங்கள் வெற்றி இலக்கு..!

tharshi

Spirited Netherlands knock South Africa out of T20 World Cup

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy