Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryகாசாவில் நிலவும் கடும் பஞ்சம் : அதிகரிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..!

காசாவில் நிலவும் கடும் பஞ்சம் : அதிகரிக்கும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை..!

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், காசா மீதான முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், காசாவுக்கான உணவு விநியோகத்தைத் தடுப்பதனை, போருக்கான ஆயுதமாக தாங்கள் பயன்படுத்தவில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, கான் யூனிஸில் உள்ள நாசர் வைத்தியசாலை வளாகத்தில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular