சுபான்ஷு சுக்லா விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் 9 பொருட்கள்..!

விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா தன்னுடன் 9 பொருட்களை எடுத்து செல்கிறார்.

41 ஆண்டுகளுக்கு பிறகு என்னும் சுபாஷ் சுக்லா என்னும் இந்தியர், நாளை(ஜூன் 11) விண்வெளிக்கு புறப்பட உள்ளார்.

ஆக்சிம் 4 (Axiom-4) திட்டத்தின் கீழ், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, நாளை மாலை 5;30 மணிக்கு புறப்பட்டு 28 மணி நேர பயணத்திற்கு பின்னர் ஜூன் 11 ஆம் திகதி இரவு 10 மணியளவில் சர்வதேச விண்வெளி மையத்தை அடைய உள்ளனர்.

இவருடன் அமெரிக்காவை சேர்ந்த பெக்கி விட்சன், போலந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரர் திபோர் கபு உள்ளிட்டோரும் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளனர்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நடைபெற உள்ள இஸ்ரோ மற்றும் நாசாவின் பல்வேறு ஆராய்ச்சிகளில், சுபான்ஷு சுக்லா பங்கு கொள்ள உள்ளார்.

9 பொருட்கள்

பொதுவாக விண்வெளிக்கு செல்லும் வீரர்கள், தங்களுடன் சில பொருட்களை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டு செல்வதுண்டு.

முன்னதாக விண்வெளிக்கு சென்ற இந்திய வம்சாவளியினரான சுனிதா வில்லியம்ஸ், மீன்குழம்பு, பகவத் கீதை, விநாயகர் சிலை மற்றும் சமோசா ஆகியவற்றை எடுத்து சென்றார்.

அதேபோல், சுபான்ஷு சுக்லா தன்னுடன் 9 பொருட்களை எடுத்து செல்ல உள்ளார்.

மாம்பழ கூழ்

மாம்பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் ஆம்ராஸ்(aamras) எனப்படும் மாம்பழ கூழ். நாசா மற்றும் ஆக்சியம் நிர்ணயித்த கடுமையான உணவுப் பாதுகாப்புத் தரநிலைப்படி, அவரது தாயார் ஆஷா சுக்லாவால் தயாரிக்கப்பட்டுள்ளது.

கேரட் அல்வா

கேரட் மூலம் தயாரிக்கப்படும் கேரட் அல்வா. பால் மற்றும் கோயாவில் மெதுவாக வேகவைக்கப்பட்டு, பின்னர் அதன் சுவை மற்றும் அமைப்பை மைக்ரோ கிராவிட்டியில் தக்க வைத்துக் கொள்ள கவனமாக பேக் செய்யப்படுகிறது.

வேகவைத்த பாசுமதி அரிசி

புகைப்படங்கள்
தனிப்பட்ட நினைவுகளுக்காக சில புகைப்படங்களை கொண்டு செல்ல உள்ளார். எங்கள் குடும்ப புகைப்படத்தை தான் கொண்டு செல்வார் என அவரது தங்கை தெரிவித்துள்ளார்.

அன்னப்பறவை பொம்மை

‘ஜாய்’ என்று பெயரிடப்பட்ட ஒரு சிறிய அன்னப்பறவை பொம்மையை விண்வெளிக்கு கொண்டு செல்ல உள்ளார். இது ஆக்ஸியம்-4 குழுவினருக்கு பூஜ்ஜிய-ஈர்ப்பு விசை குறிகாட்டியாக செயல்படும்.

நீர் கரடி என்னும் நுண் உயிரி

இந்த பயணத்தின் போது, ​​விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா செயலற்ற நீர் கரடிகளை உயிர்ப்பித்தல், முட்டையிடுதல் மற்றும் குஞ்சு பொரிப்பதை கண்காணித்தல் மற்றும் விண்வெளி மற்றும் தரை கட்டுப்பாட்டு குழுக்களுக்கு இடையிலான மரபணு வெளிப்பாடு வேறுபாடுகளை ஆய்வு செய்ய உள்ளார்.

நுண்பாசிகள்

விண்வெளி நுண்பாசிகள் பரிசோதனையில், இந்த உயிரினங்கள் ஈர்ப்பு விசை இல்லாமல் எவ்வாறு உருவாகின்றன மற்றும் மாறுகின்றன என்பதை ஆய்வு செய்ய உள்ளார்.

இந்த ஆய்வு வெற்றி பெற்றால், நுண்பாசிகள் நீண்ட விண்வெளி பயணங்களுக்கு நிலையான உணவு ஆதாரமாக இருக்கக்கூடும்.

முளைத்த சாலட் விதைகள்

இஸ்ரோ, நாசா மற்றும் பயோசர்வ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான “விண்வெளியில் முளைக்கும் சாலட் விதைகள்” பரிசோதனையின் மூலம் முளைத்த சாலட் விதைகள் விண்வெளியில் எவ்வாறு வளர்கின்றன என்பதை சுபன்ஷு சுக்லா ஆய்வு செய்வார்.

மேலும், விண்வெளிக்கு சென்று முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மாவிற்கு சிறப்புப் பரிசு ஒன்றை தர உள்ள சுக்லா, அந்த பொருளை விண்வெளிக்கு எடுத்துச் சென்று, பூமிக்குத் திரும்பிய பிறகு தர உள்ளதாக தெரிவித்தார். அந்த பொருள் என்ன என்பது தற்போது ரகசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles