Monday, February 2, 2026
HomeMain NewsCanadaகனடாவின் வாகன விபத்து - ஒருவர் பலி..!

கனடாவின் வாகன விபத்து – ஒருவர் பலி..!

கனடாவின் வோகனில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வாகனத்தில் பயணித்த ஒருவர் இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

வெஸ்டர்ன் மற்றும் ரதர்ஃபோர்ட் சாலை சந்திக்கும் பகுதியில் இரவு 10 மணியளவில் “கடுமையான வாகன விபத்து” ஏற்பட்டதாக யார்க் பிராந்திய காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

விபத்துக்குப் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், 44 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

மேலும், மற்றொரு நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வெஸ்டன் சாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்ற நிலையில், சம்பவத்தை நேரில் கண்டவர் அல்லது டாஷ்காம் வீடியோ இருந்தால், 1-866-876-5423 எண், விரைவு எண் 7704 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular