நாடளாவிய திடீர் மின்தடை குறித்து நாளை பகிரங்க விசாரணை

நாடு முழுவதும் கடந்த பெப்ரவரி 9 ஆம் திகதியன்று ஏற்பட்ட திடீர் மின் தடை குறித்து இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (5) பகிரங்க விசாரணையொன்றை முன்னெடுக்கவுள்ளது.

2002 ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 18 இன் கீழ் இந்த விசாரணை நடைபெறவுள்ளது.

அதற்கமைய, கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாளை காலை 8:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

மின்சாரத் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும் மின்வெட்டுக்கான மூல காரணங்களை அடையாளம் காண்பதையும் இந்த அமர்வு நோக்கமாகக் கொண்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் பகேற்பதற்காக பொதுமக்களுக்கும் தொடர்புடைய தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles