அமரர் வேலுப்பிள்ளை தியாகராஜா

பிறப்பு14 OCT 1928 – இறப்பு04 APR 2025
புங்குடுதீவு ஆஸ்பத்திரியடி தேனீர்க்கடை உரிமையாளர்
வயது 96
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) பேர்லின், Germany

திதி:25/03/2026

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை ப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlin ஐ நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று ஆனாலும் உங்கள் அன்பு
முகமும் அரவணைப்பும் உங்கள் நினைவலைகளும்
எங்கள் நெஞ்சை விட்டு அகலவில்லை அப்பா!

சுவாசிக்க சுவாசம் இல்லாவிட்டாலும்
நேசிக்க நாம் என்றும் யாசிக்க உங்கள்  நினைவுகள்
இருந்தால் போதும் தந்தையே!!

இன்று பிரிவு எனும் துக்கத்தினால்
ஓர் ஆண்டு சென்றாலும்
உங்கள் உடல் மட்டும் தான் அழிந்தது தந்தையே!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

ஓராண்டு அல்ல
எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும் வரை உங்கள் நினைவிருக்கும்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles