தமிழ் நாட்காட்டியின் 60 ஆண்டுகளின் சுழற்சியில் 39ஆவது ஆண்டான விசுவாவசு வருடத்திற்கு விடைகொடுத்து, பராபவ சித்திரை புத்தாண்டு ஆண்டு வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று காலை 8.40 மணிக்கு பிறந்துள்ளது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9 மணி 32 நிமிடத்துக்கு பராபவ வருடம் பிறக்கிறது.
மருத்து நீர் வைப்பதற்கான விஷூ புண்ணிய காலம் வாக்கிய பஞ்ஞாங்கத்தின் படி இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.40 மணிமுதல் மதியம் 12.40 மணிவரையில் கிழக்கு திசை நோக்கி பார்த்து வைக்க வேண்டும் என்பது ஐதீகமாகும்.
சிவப்பு நிற பட்டாடை அல்லது சிவப்பு நிற கரை வைத்த வௌ்ளை நிற பட்டாடை மற்றும் பவளம் அணிவதும் சிறப்பாகும்.
வாசகர்களுக்கு சங்கதி இணையத் தனது சித்திரைத் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
