யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்தவரிடமிருந்து பொலிஸார் கைத்துப்பாக்கி ஒன்றை கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வீடு ஒன்றில் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிந்த பொலிஸார் நேற்று – ஏப்ரல் 18ஆம் திகதி அந்த வீட்டை முற்றுகையிட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா போதைப்பொருளுடன் கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, அந்த வீட்டிலிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை வல்வெட்டித்துறை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்து வருகின்றனர்.
