வவுனியா, தம்பனைபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்று தீயில் முற்றாக எரிந்து நாசமானதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின் ஒழுக்குக் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
