ஈரானிலிருந்து இதுவரை எந்தவொரு தூதுக்குழுவும் பாகிஸ்தானின் இஸ்லாபாத்துக்கு பயணிக்கவில்லை என்று அந்த நாட்டின் அரச செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடனான பேச்சில் ஈரானிய தூதுக்குழு பங்கேற்கவுள்ளது என்று சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவல்களையும் ஈரான் அரச ஊடகம் மறுத்துள்ளது.
மேலும், அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுகளை தெஹ்ரான் ஏற்காது என்று ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் பாகர் காலிபாப் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வெளியிட்ட கருத்துகளையும் அந்த ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.
இதேசமயம், இஸ்லாமாபாத் பேச்சில் பங்கேற்பதற்கான அமெரிக்க குழு துணை ஜனாதிபதி ஜே. டி. வான்ஸ் தலைமையில் ஏப்ரல் 21ஆம் திகதியான இன்றைய தினம் தனி விமானத்தில் புறப்படவுள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
