பீஹார் அரச மருத்துவமனையில் மருத்துவம் பார்த்த காவலர்

பீஹார் மாநிலம், மேற்கு சம்​பரன் மாவட்​டம் பகாகா பகு​தி​யில் அரச மருத்துவமனை உள்​ளது. அங்கு வேலை பார்க்​கும் பாதுகாப்பு பணியாளர், நோயாளி ஒரு​வருக்கு தையல் போட்டு பண்டேஜ் போடும் புகைப்​படம், வீடியோ சமூக வலைதளங்களில் வெளி​யாகி வைரலாகி​யுள்​ளது.

இந்​தி​யில் வெளி​யான முன்​னா​பாய் எம்​பிபிஎஸ் படத்​தில் நடிகர் சஞ்​சய் தத், தனது தந்​தை​யின் ஆசைக்​காக மருத்​து​வர் போல நடித்​திருந்​தார். அது சினிமா ரசிகர்​களுக்கு சிரிப்பை வரவழைத்தது. ஆனால் பாதுகாப்பு பணியாளர் செய்த வேலை அதிர்ச்சியை ஏற்​படுத்தி உள்ளது.

இது குறித்து பொலீஸ் அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, ‘பகாகா மருத்​து​வ​மனைக்கு அருகே நடந்த டெம்போ வான் மோதிக்​கொண்ட விபத்​தில் பலர் காயமடைந்​தனர். இதையடுத்து அம்புலன்ஸ் மூலம் காயமடைந்​தவர்​கள் கொண்டுவரப்பட்டனர்.

அப்​போது, மருத்​து​வ​மனை​யில் போதிய ஊழியர்​கள் இல்​லாததால் அங்​கிருந்த பாதுகாப்பு பணியாளர் ஒரு​வர் நோயாளி​யின் காயத்துக்கு தையலிட்டு பண்​டேஜ் வைத்துக்கட்டியுள்​ளார். இதனை அந்த அம்​புலன்ஸ் சாரதியும் காயமடைந்த ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்​து, பகாகா மருத்​து​வ​மனை தரப்​பில் தற்​போது விளக்​கம் அளிக்​கப்​பட்​டுள்​ளது. மருத்​து​வ​மனை​யின் துணை கண்காணிப்பாளர் மருத்துவர் அசோக் குமார் திவாரி கூறும்​போது, ‘இந்த மருத்​து​வ​மனை​யில் போதிய மருத்துவர்கள், தாதியரர்கள் மற்றும் ஊழியர்​கள் இல்​லை. சத்திரசிகிச்சை கூட உதவி​யாளர்​கள், கட்டுப்​போடும் ஊழியர்​கள் பணி​யிடங்​கள் பல ஆண்​டு​களாக வெற்றிடமாக உள்​ளன.

இருக்​கும் ஊழியர்​களை வைத்து மருத்​து​வ​மனையை நடத்தி வரு​கிறோம். விபத்து நடந்த அன்று காயமடைந்தவர்​கள் வந்​த​போது ஒரு​வருக்கு அதி​க​மாக இரத்​தப்​போக்கு இருந்​தது. இதையடுத்து மருத்துவர் ஒரு​வரின் மேற்பார்வையில்​தான் பாதுகாப்பு பணியாளர் தையல் போட்​டார்’ – என்​றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles