அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலன், தனது பதவியிலிருந்து விலகிக்கொள்கிறார் என பென்டகன் அறிவித்துள்ளது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அவர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளரான சோன் பார்னெல் தெரிவித்துள்ளார்.
கடற்படை துணைச் செயலாளர் ஹங் காவோ தற்காலிக செயலாளராகப் பணியாற்றுவார் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியான முற்றுகைக்கு மத்தியில் அவரது பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்க கடற்படை செயலாளர் ஜோன் ஃபெலனின் விலகலுக்கான காரணத்தை கடற்படை தெரிவிக்கவில்லை.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் சமீபத்தில் பல சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளைப் பதவிகளிலிருந்து நீக்கியிருந்தார். பெலனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள ஹங் காவோ, 25 வருட அனுபவமிக்க ஒரு கடற்படை நிபுணராவார். விடைபெறும் பெலன் ஆற்றிய சேவைக்காக பென்டகன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
