புதுப்பொலிவுடன் திறக்கப்படும் மலாய் மரபுடமை நிலையம்

Museum exhibit with three vintage outfits on mannequins displayed in a circular glass case, surrounded by large portraits on hanging banners.

புதுப்பிக்கப்பட்ட மலாய் மரபுடைமை நிலையம் நாளை மறுதினம் சனிக்கிழமை(25) பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படவுள்ளது.

கடந்த 2022இல் புதுப்பிப்புப் பணிகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்ட மலாய் மரபுடைமை நிலையம்இ ‘டாரி ரந்தாவ் கே ரூமா’ (வட்டாரத்திலிருந்து இல்லம் நோக்கி) என்ற புதிய கருப்பொருளை மையமாகக் கொண்டு புதுப்பொலிவுடன் செயல்படும்.

சிங்கப்பூர் மலாய்ச் சமூகத்தின் அடையாள பரிணாம வளர்ச்சியை ஆராயும் இதன் ஆழமான கண்காட்சிகள்இ பல்லினச் சமூகம்இ பரந்த மலாய் உலகம் ஆகிய இரண்டுடனும் அச்சமூகத்திற்கு உள்ள ஆழமான தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றன.

நிலையத்தின் ஆறு நிரந்தரக் கண்காட்சிக் கூடங்களில் 279 அரும்பொருள்கள் இடம்பெற்றுள்ளன. 19ஆம் நூற்றாண்டு சிங்கப்பூரிலிருந்து தொடங்கி எதிர்காலச் சாத்தியங்களை கற்பனை செய்வது வரையிலான பயணமாக இது அமைகிறது.

மலாய்ச் சமூகத்தின் முன்னோடிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது இப்புதுப்பிப்பின் முக்கியச் சிறப்பம்சமாகும். முதல் பெண் ஹஜ் பயண முகவரான ஹஜ்ஜா மைமுனாஇ ஆரம்பகால வானொலி அறிவிப்பாளர் ஸஹ்ரா ஸாபா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளைப் பார்வையாளர்கள் இங்கு கண்டறியலாம்.

பார்வையாளர்களின் அனுபவம் வௌ;வேறு கருப்பொருள்களைக் கொண்ட ஆறு கூடங்களில வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக துணை அருங்காட்சியகக் காப்பாளர் ஷஃபிகா ஜாஃபர் செய்தியாளர் முன்னோட்ட நிகழ்ச்சியில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles