தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவடைந்தது. காலை 7.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.00 மணிக்கு முடிவடைந்தது.
மாலை 6.00 மணிக்குள் வாக்குநிலையங்களுக்கு வந்திருந்த வாக்காளர்கள் இரவு 8.00 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
மாலை 5.00 மணி நிலவரப்படி 82.29 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன. மாவட்டங்களின் அடிப்படையில் கரூரில் அதிகபட்சமாக 89.32 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதுடன், கன்னியாகுமரியில் குறைந்தபட்சமாக 73.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னை மாவட்டத்தில் மாலை 5.00 மணி நிலவரப்படி 81.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் தொகுதி வாரியாக சென்னை டொக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 87.12 சதவீதமும், மயிலாப்பூரில் குறைந்தபட்சமாக 72.79 சதவீதமும் பதிவாகியுள்ளது.
இதன்படி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை சுமார் 4 கோடியே 71 இலட்சம் பேர் வாக்களித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை சுமார் 70 இலட்சம் வாக்குகள் அதிகளவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
