மத்திய கிழக்கு போரால் பிரிட்டனில் உயரும் பணவீக்கம்

மத்திய கிழக்கு போரின் தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் பணவீக்கம் 3.3 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பெப்ரவரி மாதத்தில் 3 சதவீதமாக இருந்த பணவீக்கம், மார்ச் மாதத்தில் அதிகரித்துள்ளது என பிரித்தானியாவின் தேசிய புள்ளியில் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலை லீற்றருக்கு 8.6 பென்ஸ் உயர்ந்து 140.2 பவுண்ட்ஸ் ஆனது. டீசல் விலை 17.6 பென்ஸ் உயர்ந்து 158.7 பென்ஸ் ஆனது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகப்பெரிய உயர்வாகும்.

ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் உலகளாவிய எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயர்ந்துள்ளது.

இதனால் பிரித்தானியாவில் எரிபொருள், விமான கட்டணம், உணவு பொருட்கள் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

உணவு விலைகளும் 3.7 சதவீதம் உயர்ந்துள்ளன. குறிப்பாக சொக்லெட், இனிப்பு, இறைச்சி, மீன், குளிர்பானங்கள் ஆகியவை அதிக விலைக்கு சென்றுள்ளன.

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “இது எங்கள் போர் அல்ல. ஆனால் குடும்பங்களின் செலவுகளை அதிகரிக்கிறது. அதனால் விலையை கட்டுப்படுத்துவது எங்கள் முதன்மை இலக்கு” என தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து வங்கி (Bank of England) வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருந்தாலும், நீண்டகால போரின் தாக்கம் தொடர்ந்தால் வட்டி உயர்த்த வேண்டிய நிலை ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles