அமெரிக்க குழுவினரின் இஸ்லாமாபாத் பயணத்தை ரத்துச் செய்தார் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது தூதர்களின் இஸ்லாமாபாத் பயணத்தை ரத்து செய்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“ஈரானியர்களைச் சந்திப்பதற்காக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்குச் செல்லவிருந்த எனது பிரதிநிதிகளின் பயணத்தை நான் இப்போதுதான் ரத்து செய்தேன்.

“பயணம் செய்வதிலேயே அதிக நேரம் வீணாகிறது, அதிக வேலைப்பளுவும் இருக்கிறது!

“அதுமட்டுமல்லாமல், அவர்களின்(ஈரானிய) ‘தலைமைக்குள்’ மிகப்பெரிய மோதல்களும் குழப்பங்களும் நிலவுகின்றன. அவர்களுக்குள்ளேயே யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

“மேலும், எல்லாச் சாதகமான அம்சங்களும் நம்மிடமே உள்ளன, அவர்களிடம் எதுவுமே இல்லை! அவர்கள் பேச விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் எங்களை அழைப்பது மட்டும்தான்!” – என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles