துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய அர்ச்சுனா எம்.பி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா துப்பாக்கி முனையில் பெண்களை அச்சுறுத்திய சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் இடம்பெற்ற காணியின் உரிமை தொடர்பாக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

அந்த காணியானது தனது காணி என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கூறி வருகின்ற நிலையில், மற்றொரு தரப்பினரும் அதில் தங்களது காணி இருப்பதாக உரிமை கோரி வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று குறித்த காணியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஈடுபடும்போது, அங்கு வந்த பெண்கள் இருவர் அதில் ஒருபகுதி தமது காணி என்று கூறி முரண்பாட்டில் ஈடுபட்டனர்.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா திடீரென தனது கை துப்பாக்கியை எடுத்து அந்த பெண்களை மிரட்டியுள்ளார்.

பெண்கள் மீதான இந்த சம்பவமானது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles