வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நடத்திய விருந்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று – ஏப்ரல் 25ஆம் திகதி இரவு இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நோக்கியே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அவர் குண்டு துளைக்காத ஆடை அணிந்திருந்ததால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச்சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். செய்தியாளர்களுக்காக நடத்தப்பட்ட இந்த விருந்தில் அமெரிக்க ஜனாதிபதி, அவரின் பாரியார், துணை ஜனாதிபதி ஜே. வான்ஸ் உட்பட 2 ஆயிரத்து 600இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். கைது செய்யப்பட்டவர் 31 வயதான கோல் தோமஸ் ஆலன் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிச்சூட்டையடுத்து டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டபோது கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்த பல துப்பாக்கிச்சூட்டு முயற்சிகளைப் பற்றி நினைவுகூர்ந்தார். பின்னர் செய்தியாளர்களிடம், ‘இதைவிட ஆபத்தான தொழில்கள் வேறு அதிகம் இருப்பதாக என்னால் கற்பனை செய்ய முடியவில்லை’ என்று கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles