ஹோர்மூஸ் நீரிணையில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்

ஈரான் உடனான அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்முஸ் நீரிணையில் தாக்​குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்​ட​மிட்டு உள்​ளது.

கடந்த 8ஆம் திகதி இருதரப்பு இடையே போர்நிறுத்​தம் அமுல் செய்​யப்​பட்​டது.

இந்த இரு வார போர் நிறுத்​தம் கடந்த 23ஆம் திகதி​யுடன் நிறைவடைந்​தது. அன்​றைய தினம் கால​வரை​யின்றி போர் நிறுத்தத்தை நீடிப்​ப​தாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறி​வித்​தார்.

போர் காரண​மாக ஹோர்​முஸ் ஜலசந்​தியை ஈரான் ராணுவம் மூடி​யுள்​ளது. இதே​போல இந்த ஜலசந்​தி​யின் இரு​புற​மும் அமெரிக்க போர்க்​கப்​பல்​கள் நிறுத்​தப்​பட்டு உள்ளன. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில்இ ‘காலம் கடந்து சென்று கொண்​டிருக்​கிறது. ஈரான் தரப்பு விரைந்து முடிவு எடுக்க வேண்​டும்” என்று எச்​சரித்​துள்​ளார்.

ஈரான் உச்ச தலை​வர் மொஜ்தபா கமேனி நேற்று வெளியிட்ட அறிக்​கை​யில்இ ‘ஈரான் தேசப்​பற்றாளர்​களின் ஒற்​றுமை​யால் எதிரிகளின் கூட்​ட​ணி​யில் விரிசல் ஏற்​பட்டு இருக்​கிறது. ஈரான் மக்​களின் மனதில் அச்​சத்தை விதைக்க எதிரி நாடு முயற்சி செய்​கிறது. இதற்கு இடம்கொடுக்​கக்​கூ​டாது” என்று தெரி​வித்​துள்​ளார்.

இதனிடையே அமெரிக்காஇ ஈரான் இடையே அமைதி ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய பாகிஸ்​தான்இ துருக்​கிஇ எகிப்து உள்​ளிட்ட நாடு​கள் தீவிர முயற்சி செய்து வரு​கின்​றன. இதுதொடர்​பாக அமெரிக்க ராணுவ வட்​டாரங்​கள் கூறியதாவது –

சீனா​வில் இருந்து ஈரானுக்கு ஆயுதங்​கள்இ வெடிபொருட்​கள் கொண்டு செல்​வதை தடுக்க ஹோர்​முஸ் நீரிணைப் பகு​தியை முழு​மை​யாக முடக்கி உள்​ளோம்.

ஈரானின் சரக்கு கப்​பல்​களை அடுத்​தடுத்து கைப்​பற்றி வரு​கிறோம். இதனால் ராணுவஇ பொருளா​தா​ர
ரீ​தியி​லான நெருக்​கடியை சமாளிக்க முடி​யாமல் அமைதி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்​திடும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரு​வேளை அமைதி பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்​தால் ஹோர்​முஸ் நீணையில் மிகப்​பெரிய தாக்​குதல் நடத்​தப்​படும். தற்​போது 19 போர்க்கப்பல்​கள் மத்​திய கிழக்​கில் முகாமிட்டு உள்​ளன.

மேலும் மத்​திய கிழக்கு நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​களில் சுமார் 300இற்​கும் மேற்​பட்ட போர் விமானங்​கள் உள்​ளன. ஹோர்​முஸ் நீரிணை பகு​தி​யில் வீசப்பட்டுள்ள உள்ள கண்​ணிவெடிகளை படிப்​படி​யாக அகற்றி வரு​கிறோம்.

மேலும் கண்​ணிவெடிகளை வீசும் ஈரான் படகு​களை சுட்டு வீழ்த்த அதிபர் ட்ரம்ப் உத்​தர​விட்டு உள்​ளார். இவ்​வாறு அமெரிக்​க ராணுவ வட்டாரங்கள்​ தெரி​வித்​தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles