உணவகத்தில் மூவர் கொலை; முதியவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவின் கோத்தா திங்கி, தாமான் கோத்தா ஜெயாவில் உள்ள ஓர்
உணவகத்தில் மூவரை கொலை செய்ததார் என 71வயது முதியவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

விவசாயியான லிம் லியான் மீது மாஜிஸ்திரேட் நுர்கலிடா பர்ஹானா அபு பாக்கார் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட போதிலும் அவரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

ஏப்ரல் 19ஆம் தேதி, மதியம் மணி 1.30 அளவில், தாமான் கோத்தா ஜெயாவிலுள்ள உணவகத்தில் உள்ளூரைச் சேர்நத 61 வயதான வோங் போ சூன் , 64 வயதான சென் குவா ஹூவா மற்றும் வியட்னாம் பெண்ணான 37 வயதுடைய டிரான் தி டிராங் ஆகியோரை கொலை செய்தார் என லிம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் அதிகப்பட்சம் மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது விதியின்கீழ் லிம் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மீதான வழங்கு மே 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles