மஹாராஷ்டிரா ஷீரடி சாய்பாபா கோவிலில் இன்று புதன்கிழமை தமிழகவெற்றிகழகத்தின் தலைவர் விஜய் வழிபாடுகளில் ஈடுப்பட்டார்.
த.வெ.க., தலைவர் விஜய், நேற்று திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்து இன்று அவர் மஹாராஷ்டிராவிலுள்ள ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றார். அங்கு ஷீரடி சாய் பாபாவை வழிபட்டார். அவரது வருகையை முன்னிட்டு ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
தேர்தல் வெற்றிக்காக, இவ்வாறு விஜய் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவதாக, தவெகவினர் கூறி வருகின்றனர்.
தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்னதாக, வேறு சில கோவில்களுக்கும் அவர் செல்லக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
