பிரிட்டனில் 19 நாள் குழந்தையைக் கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை

பிரிட்டனில் தனது 19 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையைக் கொலை செய்துவிட்டு, அந்தக் பழியை வேறொரு சிறுவன் மீது சுமத்த முயன்ற தாய்க்கு ஸ்காட்லாந்து நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

பிரித்தானியாவின் கிரீனாக் (Greenock) பகுதியில் வசிக்கும் 30 வயதுடைய நிக்கோல் பிளேன் (Nicole Blain) என்ற பெண், தனது கைக்குழந்தையான தியா வில்சனை (Thea Wilson) படுகொலை செய்ததாார் என குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஜூலை 14 அன்று, குழந்தை தியா வில்சன் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குழந்தையின் உடலில் விலா எலும்பு முறிவுகள் மற்றும் மண்டை ஓட்டில் மூன்று இடங்களில் விரிசல்கள் என காயங்கள் காணப்பட்டுள்ளன.

மருத்துவப் பரிசோதனையில் குழந்தையின் காயங்கள் பலமான தாக்குதல்களாலும் குழந்தை பலமாக உலுக்கப்பட்டதாலும் ஏற்பட்டவை என உறுதி செய்யப்பட்டது.

இருப்பினும் குறித்த தாய் குழந்தையை தான் கொல்லவில்லை என வாதாடி வந்துள்ளார்.

இந்த கொலை செயலைச் செய்தது நிக்கோல் பிளேன் தான் என கிளாஸ்கோ உயர்நீதிமன்ற நடுவர்கள் ஏகமனதாகத் தீர்மானித்து தீர்ப்பளித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles