ஈரான் போர் காரணமாக உலகளவில் நிச்சயமற்ற சூழல் நிலவினாலும், சிங்கப்பூருக்கான உணவு விநியோகத்தை நியூசிலாந்து ஒருபோதும் நிறுத்தாது என்று அந்நாட்டுப் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில், நியூசிலாந்திற்குத் தேவையான எரிபொருள் ஏற்றுமதிக்கு சிங்கப்பூர் எந்தத் தடையும் விதிக்காது என்றார் அவர்.
தமது மூன்று நாள் சிங்கப்பூர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு நியூசிலாந்துப் பிரதமர் லக்ஸன் நேர்காணல் வழங்கினார்.
கிறிஸ்டோபர் லக்ஸனின் வருகையின்போது சிங்கப்பூருக்கும் நியூசிலாந்துக்கும் இடையே ‘அத்தியாவசியப் பொருள்கள் வர்த்தக ஒப்பந்தம்’ (Agreement on Trade in Essential Supplies (AOTES)) கையெழுத்தாக உள்ளது.
நெருக்கடி காலங்களிலும் உணவு, எரிபொருள், மருந்துப் பொருள்களின் தடையற்ற விநியோகத்தை இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.
நியூசிலாந்திற்குத் தேவையான டீசல் உள்ளிட்ட எரிபொருளில் மூன்றில் ஒரு பங்கு சிங்கப்பூரின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்தே கிடைக்கிறது.
