ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்ட பிறகும் கூட, பிரித்தானியாவின் பொருளாதார நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பாது என்று பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் பிரித்தானியா ஒரு மாறுப்பட்ட பாதையை’ பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க-இஸ்ரேல் ஈரான் போரின் ஒரு பகுதியாக ஹார்மூஸ் ஜலசந்தி மீதான முற்றுகை உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்களை கணிசமாக பாதித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவதன் மூலமும், பசுமை ஆற்றலுக்கு மாறுவதன் மூலமும் பிரிட்டனை ‘மேலும் மீள்திறன் மிக்கதாக’ மாற்றுவதே, பழைய நிலைமையிலிருந்து விலகிச் செல்வதற்கான வழி என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
