அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய இன்று செவ்வாய்க்கிழமை காலை மீசாலை பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தியை மறித்து சோதனை செய்ய முற்பட்ட வேளை பாரவூர்தியை விட்டு சாரதி தப்பிச்சென்றார்.
பாரவூர்தியை கைப்பற்றிய பொலிஸார் இதனை சோதனை செய்தபோது அதில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகள் காணப்பட்டன.
அதன் பின்னர் தப்பி ஓடிய சாரதியை பொலிஸார் கைதுசெய்தனர்.
சாரதியிடம் விசாரணை நடத்திவரும் பொலிஸார் அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
