ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு உதவியதை ஒப்புக் கொண்ட சீனா

கடந்த ஆண்டு இந்​தியா நடத்​திய ஒபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யின் போது, பாகிஸ்​தானுக்​குக் களத்​தில் தொழில்நுட்ப உதவி வழங்​கியதை சீனா முதல்​முறை​யாக உறுதிப்படுத்தியுள்​ளது.

கடந்த ஆண்டு ஏப்​ரல் மாதம் காஷ்மீரின் பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலில் சுற்​றுலாப் பயணி​கள் 26 பேர் உயி​ரிழந்​தனர். இதில் பாகிஸ்​தான் தீவிர​வா​தி​களுக்கு தொடர்பு இருப்​பது தெரியவந்​தது. இதையடுத்​து, மே மாதம் பஹல்​காம் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக ‘ஒபரேஷன் சிந்​தூர்’ என்ற பெயரில் பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே போர் மூண்​டது. பின்​னர் போர் வாபஸ் பெறப்​பட்​டது. இந்த குறுகிய கால போரில் பாகிஸ்​தானுக்கு சீனா உதவி செய்​த​தாக இந்​தியா கூறிய புகார்​களைச் சீனா இது​வரை மறுத்து வந்​தது.

இந்​நிலை​யில், சீனா​வின் அரசு ஊடக​மான சி.சி.டி.​வி., ஏவி​யேஷன் இண்​டஸ்ட்ரி கார்ப்​பரேஷன் ஆஃப் சீனா (ஏ.பி.ஐ.சி.) பொறி​யாளர் ஷாங் ஹெங் என்​பவரின் பேட்​டியை ஒளிபரப்​பியது. அதில், ஆபரேஷன் சிந்​தூர் மோதலின் போது பாகிஸ்​தான் விமானப் படை தளங்​களில் தங்​கி​யிருந்து ஜே-10சிஇ போர் விமானங்​களுக்​குத் தொழில்​நுட்ப உதவி வழங்​கியதை அவர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார்.

இந்​திய ராணுவத் துணைத் தளபதி லெப்​டினன்ட் ஜெனரல் ராகுல் ஆர்​.சிங் ஏற்​கெனவே குற்​றம் சாட்​டியபடி, சீனா தனது செயற்​கைக்​கோள் தரவு​களைப் பாகிஸ்​தானுக்கு உடனுக்​குடன் வழங்​கி, இந்​தி​யா​வைத் தாக்​கப் பாகிஸ்​தானை ஒரு இரவல் கத்​தி​யாக பயன்​படுத்​தி​யுள்​ளது இப்​போது நிரூபண​மாகி​யுள்​ளது.

இந்​தி​யத் தரப்​பில் பாகிஸ்​தானின் தீவிர​வாத முகாம்​கள் மற்​றும் ராணுவத் தளங்​கள் அழிக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படும் நிலை​யில், சீனா தனது போர் விமானங்​களின் திறனை உயர்த்​திப் பிடிப்​ப​தன் மூலம், தனது ஜே-35 ஸ்டெல்த் ரக விமானங்​களை உலக நாடு​களுக்கு விற்​பனை செய்ய இந்​தச் சூழலைப் பயன்​படுத்​திக் கொள்​வ​தாகப் பாது​காப்பு வல்​லுநர்​கள் கருதுகின்​றனர்.

சீனா​வின் இந்த வெளிப்​படை​யான ஒப்​புதலைத் தொடர்ந்​து, இந்​தி​யா​வின் பாது​காப்பு மற்​றும் சீனா​வுட​னான வர்த்​தகக் கொள்​கைகள் குறித்து நா​டாளு​மன்​றத்​தில் வி​வா​திக்​க வேண்​டும்​ என்​று எதிர்க்​கட்​சிகள்​ கோரிக்​கை ​விடுத்​துள்​ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles