17 வயது மாணவி ஒருவர், கடந்த மாதம் மலேசியாவின் மலாக்கா மருத்துவமனையில் அதிக ரத்தக்கசிவுடன் அனுமதிக்கப்பட்ட சம்பவம், பின்னர் அதிர்ச்சிகரமான பின்னணியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
காவல்துறை தகவலின்படி, ஏப்ரல் 25ஆம் திகதி மாலை 6.50 மணியளவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த மாணவியின் பரிசோதனையில், அவர் சுமார் 5 மாதம் கர்ப்பமாக இருந்ததும், கர்ப்பத்தை கலைக்க மருந்து எடுத்ததால் ஏற்பட்ட சிக்கலே உடல்நலக் குறைவுக்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் பெலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
விசாரணையில் மேலும் தெரியவந்ததாவது, பிறந்த நிலையில் இருந்த கருவை அவரது 18 வயது காதலன் எடுத்துச் சென்றுள்ளதோடு, பின்னர் அதை தனது வீட்டின் பின்னால் புதைக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு முன் தனது ஹோண்டா சிட்டி காரில் தற்காலிகமாக மறைத்து வைத்திருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
