தவறான திசையில் பயணிக்கும் பிரித்தானிய அரசாங்கம் – 85 சதவீத மக்கள் கருத்து

பிரித்தானிய அரசாங்கம் திசை மாறிப் பயணிப்பதாக அல்லது தவறான திசையில் பயணிப்பதாக 85 சதவீதமான மக்கள் கருதுகின்றனர்.

இப்சோஸ் மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நாடு தழுவிய அளவில் பரவலான அவநம்பிக்கை நிலவுவதை இந்த கணக்கெடுப்பு வெளிக்காட்டுகிறது.

வாழ்க்கைத் தரம் குறித்த பொதுமக்களின் திருப்தி குறைந்து வருவது, தேசிய சுகாதார சேவை (NHS) மீதான நம்பிக்கை அதலபாதாளத்தில் சரிந்து வருவது, மற்றும் சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல்வாதிகளின் நேர்மை மீதான நம்பிக்கை குறைந்து வருவது ஆகியவற்றை இந்தக் கணக்கெடுப்பு எடுத்துக்காட்டுகிறது.

இதற்கிடையே புதிய பிரதமராக பதவியேற்றுள்ள அண்டி பர்ன்ஹாம், தனது நிர்வாகம் “நம்பிக்கையை மீட்டெடுக்கும்” என்றும், “வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் அரசாங்கமாக” இருக்கும் என்றும் நம்பிக்கை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles