உக்ரைன் இராணுவத்தில் அதிரடி மாற்றம் : புதிய தலைமைத் தளபதி நியமனம்

ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு , உக்ரைன் இராணுவத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக, ஜெனரல் மிகாய்லோ டிராபதி (43) உக்ரைனின் புதிய தலைமைத் தளபதியாக ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி நியமித்துள்ளார்.

முந்தைய தலைமைத் தளபதியான 60 வயதான ஒலெக்சாண்டர் சிர்ஸ்கி என்பவருக்குப் பதிலாக ஜெனரல் டிராபதி நியமிக்கப்பட்டுள்ளார்.

மரியாதைக்குரிய மற்றும் அனுபவமிக்க தளபதியான இவர், 2024 முதல் 2025 வரை உக்ரைனின் தரைப்படைப் பிரிவை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல பாதுகாப்பு அமைச்சரான மிகாய்லோ பெடோரோவ் திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, உக்ரைனில் வெடித்த போராட்டங்களுக்குப் பிறகே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.

மேலும், போரில் வெற்றி பெற தொழில் நுட்பப் பயன்பாடே முக்கியம் என நம்பும் உக்ரைனியர்களுக்கும், பாரம்பரிய அணுகுமுறையைக் கொண்ட பழைய தலைமுறை ராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளையும் இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles