முதலமைச்சராக விஜய் பதவியேற்றதை கொண்டாடிய நியூசிலாந்து வாழ் தமிழர்கள்

தமிழக முதல்மைச்சராக விஜய் இன்று சனிக்கிழமை பதவியேற்றதை தமிழகம் மட்டுமின்றி கண்டங்கள் கடந்தும் அவருடைய ரசிகர்களும், ஆதரவாளர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில், தீவு நாடான நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச்சில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழக கொடியுடன் திரண்ட விஜய் ரசிகர்கள் கேக் வெட்டியும், இனிப்புகளை பரிமாறியும், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இதில், நியூசிலாந்து வாழ் தமிழர்கள் பலர் கலந்துகொண்டனர். விஜய் பதவி ஏற்கும் நிகழ்ச்சியும் அங்கு அகன்ற திரையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விஜய் முதல்மைச்சராக பொறுப்பேற்றதையொட்டி கொண்டாட்டம் நடைபெற்ற அந்த ஹோட்டலின் உரிமையாளர் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles