சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் மூன்று நாட்டுப் பொருளாதார வட்டாரம் குறித்து மீண்டும் ஆலோசனை நடத்துகின்றன.
மலேசியாவின் ஜொகூரையும் இணைக்கும் அந்தப் பொருளாதார வட்டாரம் சிஜோரி வளர்ச்சி முக்கோணம் (SIJORI Growth Triangle) என்று அழைக்கப்படுகிறது.
விளம்பரம்
தொழில்துறை முதல் எரிசக்தி வர்த்தகம் வரை பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருதரப்பும் இணங்கியுள்ளன.
இந்தோனேசியாவுடன் இருதரப்பு உறவு உன்னதமான நிலையில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கூறினார்.
மூன்று நாள் பயணமாக அவர் ஜக்கர்த்தா சென்றுள்ளார்.
இந்தோனேசிய வெளியுறவு அமைச்சர் சுகியோனோவுடன் அடிக்கடி பேசுவதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தற்போதுள்ள உலகச் சூழலில் பக்கத்து நாடுகளுடன் ஒத்துழைப்பும் நெருக்கமான கருத்துப் பரிமாற்றமும் முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியம் என்றார் அவர்.
விளம்பரம்
டுகோனோ எரிமலையில் சிக்கிய சிங்கப்பூர் மலையேறிகள் இருவரின் உடல்களை மீட்க இந்தோனேசியா உதவியது.
அதற்காக டாக்டர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
சிங்கப்பூரும் இந்தோனேசியாவும் அடுத்த ஆண்டு இருதரப்பு உறவின் 60ஆம் ஆண்டு நிறைவை அனுசரிக்கவுள்ளன.
அது அரசதந்திர உறவின் முக்கிய மைல்கல்; இருதரப்பு உறவைப் புதுப்பிக்கவும் இன்னும் பல்லாண்டுக்கு அதன் திசையைத் தீர்மானிக்கவும் அதுவொரு நல்வாய்ப்பு என்று திரு. சுகியோனோ கூறினார்.
மத்திய கிழக்கு நிலவரம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து அமைச்சர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
