25 இலட்சம் டொலர் நிதி இணையவழி திருட்டுப் போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த நிதி அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பு செயன்முறைகளைப் பலப்படுத்தியுள்ளோம் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மே – 13ஆம் திகதியான இன்று மத்திய வங்கியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும், ‘இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நிதி அமைச்சுடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த முறையை எவ்வாறு பலப்படுத்தலாம் என்பது குறித்தும் – எங்களது அனுபவம் மற்றும் அறிவைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.’ என்றும் அவர் கூறினார்.
