அல்லைப்பிட்டி படுகொலை: உணர்வுபூர்வ நினைவேந்தல்!

அல்லைப்பிட்டி படுகொலை நினைவுநாளும் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தலும் இன்று புதன்கிழமை நடைபெற்றன.

அல்லைப்பிட்டி சேமக்காலையில் தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அல்லைப்பிட்டி படுகொலையில் உயிர்நீத்தவர்களுக்கும் இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கமான பொதுச் சுடரை அல்லைப்பிட்டி பங்குத் தந்தை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து படுகொலையானவர்களின் கல்லறைகளுக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன் பின்னர், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் அல்லைப்பிட்டி படுகொலையின் போது உயிரிழந்தவர்களின் உறவுகள்இ முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினர், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை அருட்தந்தை றெக்னோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Priest in white robes conducts a grave-side ritual at a black marble tomb as onlookers hold flowers.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles