நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலேயே இந்த மரணம் பதிவாகியுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் 4 மாவட்டங்களின் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 17 பேர் தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்றும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
